ஆட்சி தான் மாறியுள்ளது, காட்சி மாறவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ் அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணை அருகே மூழ்கி சிறுமிகள் உட்பட ஏழு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். அதேபோல, அரசியல், கட்சித் தலைவர்கள் நேரடியாக உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அந்த பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
அண்மைச் செய்தி: “எங்களுக்கு ஜாதி, மதம் எதுமில்லை”- விஜய் ரசிகர்கள்
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இனிமேல் இது போன்ற சோக சம்பவம் எங்கும் நடைபெறக்கூடாது. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால் தான் 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், அங்குள்ள பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும், அரசின் 5 லட்சம் உதவித்தொகையை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், உயிரிழந்த 7 பேரின் நினைவாக இந்த பகுதியில், நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், கரூரில் போடாத சாலைக்கு 3 கோடி ரூபாயை அமைச்சர் செந்தில் பாலாஜி எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஆட்சி தான் மாறியுள்ளது. ஆனால், காட்சி மாறவில்லை எனக் கூறிய அவர், எந்த திட்டத்திற்குப் பணம் ஒதுக்கப்படுகிறதோ அந்த திட்டம் முழுமையாக மக்களைச் சென்று சேர வேண்டும் எனக் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








