முகம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாஜக தலைவர்கள் சிலரின் சமீபத்திய வெறுப்பு பேச்சுக்களை கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். இத்தகைய பேச்சுக்கள் நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வன்முறையை பரப்புவதோடு, நாட்டு மக்களையும் பிளவுபடுத்துகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால், குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள பாஜக தலைவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
- நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்.
அதேநேரத்தில், ஆத்திரமூட்டும் செயல்களைப் பொருட்படுத்தாமல் மக்கள் நலன் கருதி அமைதி காக்க வேண்டும் என்று அனைத்து சாதி, மத, சமூக மக்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








