நயன்தாரா திருமணம்; விடுதியின் முன்பு அடுத்தடுத்து விபத்து

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடந்த தனியார் நட்சத்திர விடுதியின் முன்பு அடுத்தடுத்து நடந்த மூன்று விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் திரைத்துறை நட்சத்திரமான நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி, கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம்…

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடந்த தனியார் நட்சத்திர விடுதியின் முன்பு அடுத்தடுத்து நடந்த மூன்று விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் திரைத்துறை நட்சத்திரமான நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி, கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் இன்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், மாமல்லபுரம் நோக்கிச் சென்ற இனோவா கார் ஒன்று ஓட்டுநரின் கவனக்குறைவால், முன்புறம் சென்று கொண்டிருந்த தனியார் செய்தி நிறுவன இனோவா கார் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. அதில், ஒரு வாகனத்தின் முன்பக்கமும், மற்றொரு வாகனத்தின் பின்பக்கமும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அண்மைச் செய்தி: ‘டிஜிலாக்கர் சேவையை, வாட்ஸ்ஆப்பில் எப்படி பெறுவது?’

அதன்பின்னர், மாமல்லபுரம் நோக்கிச் சென்றுகொண்டு இருந்த வாடகை வாகனத்தின் மீது பின்புறம் வந்த கார் தீடிரென மோதியது. உடனடியாக அங்கு விரைந்து வந்த காவல்துறை இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதேபோல, மாமல்லபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விபத்துகள் நயன்தாராவின் திருமணம் நடைபெற்ற நட்சத்திர விடுதியின் முன்பாக அமைக்கப்பட்டு இருந்த பேரிகார்ட் எனக் கூறப்பட்டாலும், வாகனங்கள் இந்த சாலையில் அதிக வேகத்தில் இயக்கப்படுவதே இதற்கு காரணம் என காவல்துறையை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.