மியான்மர் நாட்டில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சியைக் கலைத்து தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்றுவருவதற்கு எதிராக அந்நாட்டு அழகி ஹான் லே கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில் மியான்மர் நாட்டு அழகியாக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஹான் லே(22) ராணுவ ஆட்சிக்கு எதிராக தற்போது குரல்கொடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹான் லே தற்போது தாய்லாந்து நாட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில் தலைநகர் பாங்காகில் நடைபெற்ற ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட ஹான் லே, “ராணுவ ஆட்சிக்கு பிறகு மியான்மரில் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். மியான்மரில் பத்திரிகையாளர்களின் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளது.தற்போது நான் அவர்களுக்குப் பதிலாக பேச வந்துள்ளேன். சர்வதேச நாடுகள் எங்களுக்கு உதவவேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணுவத்துக்கு எதிராக ஹான் லே கண்டனம் தெரிவித்துள்ளதால் சமூக வலைத்தளத்தில் அவருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மியான்மருக்கு ஹான் லே வரவேண்டாம் என அவர்களுடைய நண்பர்கள் தெரிவித்துள்ளதாக ஹான் லே கூறியுள்ளார். ‘save the children’ அமைப்பு சார்பில் வெளியிட்ட செய்தியில் மியான்மரில் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 43 பேர் குழந்தைகள் என தெரிவித்துள்ளது.