முக்கியச் செய்திகள் உலகம்

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மியான்மர் நாட்டில் 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கெதிராக ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கடுமையாக போராடி வந்தார். அதனையடுத்து எழுந்த மக்கள் போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் குற்றம்சாட்டி அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு, தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த பிப்ரவரி 1ம் தேதி மியான்மர் நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், அன்று அதிகாலையில் ஆங் சாங் சூகி உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாடு முழுவதும் ஓராண்டுக்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மியான்மரில் மீண்டும் ஜனநாயக அரசை அமைக்கவும் கைது செய்யப்பட்டுள்ள அரசின் தலைமை ஆலோசகர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தை கலைப்பதற்காக ராணுவத்தினர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில், யங்கூன் சாலையில் திரண்ட பொதுமக்கள் ராணுவ சீருடையும் தீயிட்டு கொளுத்தினர். அத்துடன் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மீண்டும் மக்கள் ஆட்சியை அமல்படுத்தக்கோரியும் கோஷமிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பேங்கிங் கிரெடிட் வட்டி சதவீதத்தை உயர்த்த, ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை

Yuthi

வைகாசி விசாகம் – முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

Web Editor

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள்; குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை

Jayasheeba