பணத்தை திருடியதாக பிச்சைக்காரர் போலீசாரிடம் புகார்

திருபத்தூரில் பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றதாக முதியவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். திருபத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாரியம்மன் கோயில் பகுதியில் முதியவர் பிச்சைமணி பிச்சையெடுத்து வருகிறார்.…

திருபத்தூரில் பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றதாக முதியவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

திருபத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாரியம்மன் கோயில் பகுதியில் முதியவர் பிச்சைமணி பிச்சையெடுத்து வருகிறார். இந்நிலையில் மாரியம்மன் கோயில் அருகே இரவு தங்கி வந்துள்ளார்.

அப்போது தான் துணிப்பையில் சேமித்து வைத்திருந்த ரூ.1500 முதல் ரூ. 2000 பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாகவும் பணத்தை மீட்டு தருமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். திருடிச்சென்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.