முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

’எனது கடைசி டி-20 போட்டி சென்னையில்தான்…’-பாராட்டு விழாவில் ’தல’ தோனி நச்!

’எனது கடைசி டி-20 போட்டி சென்னையில்தான் நடக்கும்’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டம் வென்றது. நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. இதையடுத்து சென்னை அணிக்கு, விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று பாராட்டு விழா நடந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் அணியின் உரிமையாளர் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், தமிழ்நாடு அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 7 ஆம் எண் கொண்ட சிஎஸ்கே ஜெர்சியை அவர் பரிசளித்தார்.

விழாவில் பேசிய தோனி, ‘என்னுடைய முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்தான் தொடங்கியது. சென்னை அணி, என்னை தேர்வு செய்யும் என்று நான் நினைக்கவே இல்லை. கிரிக்கெட் மீதான புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. சென்னை அணிக்கு தமிழ்நாட்டை தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர். எந்த நாட்டில் ஐபிஎல் போட்டி நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எங்களை ஆதரித்தார்கள். மிகச் சிறந்த நினைவுகளை சென்னை தந்துள்ளது.

இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே சஸ்பென்ட் செய்யப்பட்டபோது அதிகம் பேசப்பட்ட அணியாக அது இருந்தது. இங்கு விளையாடிய ஒவ்வொரு போட்டியின்போதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு சிறப்பானது. எனது கடைசி டி-20 போட்டி சென்னையில்தான் நடக்கும். அடுத்த ஆண்டாக இருந்தாலும் ஐந்து வருடம் கழித்து இருந்தாலும் அது சென்னையில்தான் நடக்கும். இவ்வாறு தோனி கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

Halley Karthik

விவசாயிகளுக்கு 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர்!

Gayathri Venkatesan

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த 86 வயது மூதாட்டி!

Gayathri Venkatesan