முக்கியச் செய்திகள் சினிமா

அப்பா அம்மா செய்த நல்லது தான் பொன்னியின் செல்வன் படத்தில் நான் நடிக்க காரணம் – நடிகர் அர்ஜுன் சிதம்பரம்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நான் நடிக்க எங்க அப்பா அம்மா ஏதோ நல்லது செய்தது தான் காரணம் என நடிகர் அர்ஜுன் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் செப் 30 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இப்படத்தில் வரகுணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அர்ஜுன் சிதம்பரம் நீயூஸ்7 தமிழுக்கு அளித்த பேட்டியில்,“என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான படம் இது. பொன்னியின் செல்வன் என்னும் மலையில் ஒரு சிறிய கல்லாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி நேர் கொண்ட பார்வை படத்தைப் போல இந்த படமும் எனக்கு ஒரு முக்கியமான படம்.

சண்டைக் காட்சிகளில் தான் கார்த்தி, ஜெயம் ரவி என்னுடன் இருந்தனர். மணி ரத்னம் எழுத்தைப் படிக்கும் போதே அவருக்கு என்ன வேண்டும் என்பது தெரிந்து விடும். படத்தின் தேர்வுக்குச் செல்லும் போதே என்னை புழிந்து எடுத்து விட்டனர். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை” என தெரிவித்தார்.

அர்ஜுன் சிதம்பரம் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இவர் 2019 ம் ஆண்டு வெளியான அஜித் குமார் நடித்த ” நேர்கொண்ட பார்வை ” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தினை ஏற்று நடித்து தமிழ்த் திரையில் அனைவரின் கவனத்தையும் பெற்றுப் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா கட்டுக்குள் வர மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளே காரணம்: உயர் நீதிமன்றம்!

Halley Karthik

இந்தோனேசியாவில் நடுக்கடலில் 53 வீரர்கள் மரணம்; கடைசியாக அவர்கள் பாடிய பாடல் வைரல்!

EZHILARASAN D

லோகேஷ்-விஜய் மீண்டும் கூட்டணி; பூஜையுடன் தொடங்கிய தளபதி 67

G SaravanaKumar