முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு – நகைச்சுவை பேச்சாளரின் பேச்சு சர்ச்சை

நகைச்சுவை பேச்சாளரான அபிஷேக்குமார் பேசிய பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அரசு பள்ளியில் பயின்றவர்கள் குறைந்த அறிவுத்திறனை உடையவர்கள் என்று தனியார் பள்ளியில் பயின்றவர்கள் கூறிவருவது வழக்கம். அந்த வகையில் ஸ்டாண்ட் ஆப் காமெடியன் அபிஷேக் குமார், நகைச்சுவை செய்வதாக கூறி பேசியது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஸ்டாண்ட் ஆப் காமெடி செய்வதாக கூறி அவர் பேசியதாவது, மாநிலக் கல்வி திட்டத்தில் பயின்றவர்கள் குறைந்த அறிவுத் திறனை உடையவர்கள் என்றும் அதோடு அவர்களின் ஆங்கில உச்சரிப்பு சரியாக இருப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை ஒரு நபர் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. அதில் இந்த காணொலிக்கு பதிலளிக்கும் விதமாக ஐபிஎஸ் அதிகாரியான வருண் குமார் கூறியதாவது, தானும் மாநிலக் கல்வி திட்டத்தில் பயின்றவர் தான், 2010 ல் நடைபெற்ற இந்தியக் குடிமையியல் பணிகள் தேர்வில் இந்திய அளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளேன். நானும் அறிவுத்திறன் குறைந்தவர் எனக் கருதுகிறீர்களா? என அவர் கேள்வியெழுப்பிள்ளார்.

மேலும் பல்வேறு தரப்பினரும் ஸ்டாண்ட் ஆப் காமெடியன் அபிஷேக் குமாருக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். மாநில கல்வியை குறைத்து மதிப்பிட்டு, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தை உயர்த்தி பேசியது சரியில்லை என்றும் இணைய வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்த வீடியோவும் அதற்கு ஐபிஎஸ் அதிகாரி பதில் அளித்திருப்பதும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லி செங்கோட்டையில் பொதுமக்கள் நுழைய தடை விதிப்பு

Gayathri Venkatesan

ஹேக்கர்களிடம் இருந்து லேப்டாப் தகவல்கள் திருடப்படாமல் பாதுகாப்பது எப்படி?

Arivazhagan Chinnasamy

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பொதுமுடக்கத்திற்கு அழைப்பு

Mohan Dass