மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி அருகே இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை
நடைபெறும் முத்தாலம்மன் கோவிலின் தேர் திருவிழா வெகுவிமரிசையாக
நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற முத்தாலம்மன் திருக்கோவில். இந்த திருக்கோவிலில் , இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பங்குனி உற்சவ திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன் படி கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பின் நேற்றும் , இன்றும் இரண்டு நாள்
திருவிழாவாக இந்த விழா கொண்டாடப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சப்பர தேர் திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. 51 அடி உயரம் கொண்ட தேர் உருவாக்கப்பட்டு , அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பர தேரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சப்பர தேர் எடுத்துச் செல்லப்பட்டது.
மேலும், ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி மற்றும் ஆயிரம் கண் பானையுடன்
தேருக்கு பின்னால் ஊர்வலமாக எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
—கு.பாலமுருகன்







