குடியாத்தம் அருகே களைகட்டிய எருது விடும் திருவிழா!

குடியாத்தம் அருகே மாடு விடும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி கிராமத்தில் 21 ஆம் ஆண்டாக மஞ்சு விரட்டு என்னும் மாடு விடும் திருவிழா நடை பெற்றது. எருது…

குடியாத்தம் அருகே மாடு விடும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி கிராமத்தில் 21 ஆம் ஆண்டாக மஞ்சு விரட்டு என்னும் மாடு விடும் திருவிழா நடை பெற்றது. எருது விடும் விழாவை முன்னிட்டு சாலைகளில் மண் கொட்டி பாதுகாப்பாக மண் சாலை அமைக்கப்பட்டன. அரசு வழிக்காட்டுதல் படி போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து காளை மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர் குழு மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் மாடுகள் அனைத்தும் மாடி விடும் போட்டியில் அனுமதிக்கப்பட்டது.

ஒரு எருது ஒரு சுற்றில் விடப்பட்டு அதில் அதிவேகமாக ஓடும் காளை வெற்றி பெற்றதாக
அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 65 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 55 ஆயிரம் ரூபாயும் மொத்தம் 62பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் எருது விடும் விழாவில் வேலூர், ஆம்பூர், காட்பாடி மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. இதை ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.  மாடு விடும் திருவிழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

மேலும், மத்திய விலங்குகள் நல பாதுகாப்பு வாரிய சிறப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

—ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.