முக்கியச் செய்திகள் தமிழகம்

சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைப்பு; முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகளின் விலையை குறைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்மனைகளின் அதிக விலை காரணமாக பல ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்படாமல் காலி மனைகளைக் கொண்ட தொழிற்பேட்டைகளின் மனைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஏக்கர் ஒன்றிற்கு ஒரு கோடியே 19 லட்சத்து 79 ஆயிரத்தில் இருந்து 75 சதவீதம் குறைத்து 30 லட்சத்து 81 ஆயிரத்து 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் தொழிற்பேட்டையில் 73 சதவீதமும், நாகை தொழிற்பேட்டையில் 65 சதவீதமும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதே போல், கோவை மாவட்டம் குறிச்சி தொழிற்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் தொழிற்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூர் தொழிற்பேட்டை, ஈரோடு தொழிற்பேட்டையிலும் மனைகளில் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

400க்கும் மேற்பட்ட காலிமனைகளைக் கொண்ட காரைக்குடி, பிடாநேரி, ராஜபாளையம் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 30 சதவீதம் முதல் 54 சதவீதம் வரையிலும்,

விருதுநகர், அரக்கோணம், பர்கூர் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலும், மேலும் 12 தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 5 முதல் 25 சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் தொழில் துவங்க ஏதுவாக மனைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சென்னை மெட்ரோ ரயில் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Halley Karthik

தியேட்டர்கள் திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு : மு.பெ.சாமிநாதன்

Jeba Arul Robinson

நாட்டில் புதிதாக 10,549 பேருக்கு கொரோனா தொற்று

Saravana Kumar