கடும் மழை: சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை

மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு, மாதந்தோறும் 8 நாட்கள் பக்தர்கள் …

மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு, மாதந்தோறும் 8 நாட்கள் பக்தர்கள்  செல்ல அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் கொரோனா காரணமாக 2 மாதங்களுக்குப் பின்பு கோயில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இந்த மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கும் கடந்த 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல நேற்று அனுமதி வழங்கப்பட்டது. நேற்று மாலை கடுமையாக மழை பெய்ததால் 200-க்கு மேற்பட்ட பக்தர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இன்று, அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.

இந்நிலையில், கனமழை காரணமாக கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.