கூல் கேப்டனின் வேற லெவல் ஹேர்ஸ்டைல்: கன்னாபின்னா வைரலில் தோனி போட்டோ

கிரிக்கெட் வீரர் தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளையாட்டு வீரர்களின் ஹேர் ஸ்டைலுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அவர்களும் சளைக்காமல் விதவிதமான தலைமுடியுடன் போட்டிகளில் கலந்துகொண்டு தெறிக்க விடுவார்கள்.…

கிரிக்கெட் வீரர் தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளையாட்டு வீரர்களின் ஹேர் ஸ்டைலுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அவர்களும் சளைக்காமல் விதவிதமான தலைமுடியுடன் போட்டிகளில் கலந்துகொண்டு தெறிக்க விடுவார்கள். தல தோனியும் அப்படித்தான்.

ஆரம்பத்தில் நீண்ட தலைமுடியுடன் இந்திய அணியில் என்ட்ரியான தோனி, பிறகு அவ்வப்போது வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் காட்சியளிப்பார். தோனியின் வெறிகொண்ட ரசிகர்கள் அந்த ஹேர் ஸ்டைலை வைரலாக்குவார்கள். இப்போதும் அப்படித்தான்.

ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கிம் என்பவர், ‘லெஜண்ட் தோனிக்கு இந்த ஹேர் ஸ்டைலையும் தாடியையும் வடிவமைத்ததை ரசித்தேன்’ என்று குறிப்பிட்டு  புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள், அமீரத்தில் மீண்டும் தொடங்க இருக்கின்றன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.