சர்வதேச நாடுகளுக்கான பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

இந்தியாவுக்கு வரும், இந்தியாவில் இருந்து செல்லும் சர்வதேச பயணிகள் விமானத்துக்கான தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்த தையடுத்து இந்தியாவில் இருந்து புறப்படும்,…

இந்தியாவுக்கு வரும், இந்தியாவில் இருந்து செல்லும் சர்வதேச பயணிகள் விமானத்துக்கான தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்த தையடுத்து இந்தியாவில் இருந்து புறப்படும், இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள் விமான சேவையானது கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் சிறப்பு அனுமதியின் பேரில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷம், இங்கிலாந்து, கனடா, எத்தியோப்பியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக் உள்ளிட்ட 27 நாடுகளுக்கு மட்டும் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல அனைத்து சர்வதேச நாடுகளுடனான சரக்குப் போக்குவரத்துக்கு எந்த வித தடையும் இல்லை என்று ஏற்கனவே இந்தியா அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் டெல்டா வகை கொரோனாவானது உலகின் சில நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலும் சிறிது, சிறிதாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இப்போது சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடையை அடுத்தமாதம் 31ம் தேதி வரை இந்தியா நீட்டித்திருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.