கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் பலி

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்தது இதில் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தால், அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள்…

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்தது இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த சம்பவத்தால், அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தது. இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த இந்த விபத்தில் ராஜலெட்சுமி என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கிய 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வீடுகள் அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் வரிசையாக மற்ற வீடுகளில் தூண்கள், சுவர்கள் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஒரு குழந்தை உட்பட 5 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.