”எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் !

“எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் படம் திரைக்கு…

“எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. எம்.எஸ். பாஸ்கர், இளவரசு உள்ளிட்ட  நடிகர்கள் நடித்துள்ளனர். புதிதாக வாங்கும் காரை நிறுத்த முடியாமல் தவிக்கும் பார்க்கிங் பிரச்னையை கதையாக கொண்டு ’பார்க்கிங்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. 
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்த நிலையில் அண்மையில் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.  டிசம்பர் ஒன்றாம் தேதி பார்க்கிங் படம் ரிலீசாக உள்ள நிலையில், இன்று படக்குழுவின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், ஹரீஷ் கல்யாண், இந்துஜா உள்ளிட்ட படக்குழுவுடன் லோகேஷ் கனகராஜூம் பங்கேற்றனர்.  மேலும், நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ், பார்க்கிங் படத்தில் பிளாக்பஸ்டர் பெறும் அளவுக்கு அனைத்து அம்சங்களும் இருப்பதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து,  நடிகர் எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் விருப்பம்.அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இதை அடுத்து,  பேசிய எம்.எஸ்.பாஸ்கர், லோகேஷ் கனகராஜ் என்னுடன் பயணிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறியது மகிழ்ச்சி. கமல், விஜயை இயக்கியுள்ளீர்கள். நீங்கள் கூப்பிடுங்கள் நான் வருகிறேன்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.