தீபத்திருவிழாவை ஒட்டி அண்ணாமலையாருக்கு, காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட மலர் மாலைகள்!

தீபத்திருவிழாவையொட்டி, அண்ணாமலையாருக்கு அணிவிக்க காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மலர் மாலைகள் அனுப்பி வைக்கப்பட்டது. திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும்…

தீபத்திருவிழாவையொட்டி, அண்ணாமலையாருக்கு அணிவிக்க காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மலர் மாலைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இதற்கிடையே, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.  இதனையடுத்து, இன்று மாலை, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவள்ளது.

இந்த நிலையில், தீபத்திருவிழாவையொட்டி, அண்ணாமலையாருக்கு அணிவிக்க காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மலர் மாலைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

மகாதீப உற்சவத்தின்போது, வீதி உலா வரும் அண்ணாமலையாருக்கு
அணிவிக்கப்படும் மலர் மாலைகள் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 161 ஆண்டுகளுக்கும் மேலாக திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில், மலர் மாலைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.