’எப்படி கொலை செய்யலாம்?’ கூகுளில் தேடி கணவனை கொன்ற மனைவி!

எப்படி கொலை செய்யலாம் என்று கூகுளில் தேடி, காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்த மனைவியை, போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஹர்டா மாவட்டத்தில் உள்ள கெடிபூரைச் சேர்ந்தவர் தபசும். இவர்…

எப்படி கொலை செய்யலாம் என்று கூகுளில் தேடி, காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்த மனைவியை, போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் ஹர்டா மாவட்டத்தில் உள்ள கெடிபூரைச் சேர்ந்தவர் தபசும். இவர் கணவர் ஆமிர். மகாராஷ்டிராவில் பணியாற்றி வந்தார் இவர். இதற்கிடையே, ஊரில் இருந்த தபசுமிற்கு அதே பகுதியை சேர்ந்த இர்பான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிக்கப்பட்டதால், ஹர்டாவுக்குத் திரும்பினார், அமீர். இதனால் இர்பானை சந்திக்க முடியவில்லை தபசுமிற்கு. இதையடுத்து ஆமிரை கொன்று விட முடிவு செய்தார், தபசும். இதுபற்றி அவரும் இர்பானும் போனில் ஆலோசித்தனர். அதன்படி திட்டம் தீட்டினர். தபசும், கொலை செய்துவிட்டு தடயங்களை எப்படி மறைப்பது என்பது குறித்து கூகுளில் 15 மணி நேரம் தேடியுள்ளார்.

அதன்படி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனர். ஆமிருக்கு ஏற்கனவே ஆஸ்துமா பிரச்னை இருந்தது. இதற்காக அவர் மருந்து மாத்திரைகளை எடுத்து வருகிறார். கடந்த 18 ஆம் தேதி, ஆமிர் பயன்படுத்தும் மாத்திரைக் குப் பதிலாக வேறு மாத்திரையை கொடுத்துள்ளார் தபசும். அதை, நம்பி போட்டதும் மயக்கமாகிவிட்டார் ஆமிர்.

பிறகு வீட்டுக்கு வந்த இர்பான், அவர் கை, கால்களை கட்டியபின், சுத்தியலால் அடித்துக் கொன்றார். பிறகு உடலை போட்டுவிட்டு, போலீசில் புகார் செய்தார். கொள்ளைக் கும்பல் வந்து கொன்றுவிட்டதாகவும் வீட்டில் இருந்த நகை களை திருடியதாகவும் புகார் சொன்னார் தபசும்.

அவருடைய நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், செல்போனை சோதனை செய்து பார்த்தனர். அவர், கொலை நடந்த அன்று இர்பானுடன் அதிக நேரம் போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை முறைப்படி விசாரித்தபோது, கணவரைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரையும் இர்பானையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.