“தர்மேந்திர பிரதான் சீரழிந்த கல்வி முறையின் சின்னம்!” – ராகுல்காந்தி

தர்மேந்திர பிரதான் ஊழல் மற்றும் இந்தியாவின் சீரழிந்த கல்வி முறையின் சின்னம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “தர்மேந்திர பிரதான் ஊழல் மற்றும் இந்தியாவின் சீரழிந்த கல்வி முறையின் சின்னம், அவர் என்றென்றும் அப்படித்தான் இருப்பார்.

அதே கல்வி முறைதான் 26 குழந்தைகளின் உயிரைப் பறித்தது, மேலும் லட்சக்கணக்கான இளைஞர்களைத் தெருக்களுக்குத் தள்ளியது. அவருடைய ராஜினாமா கூட அறநெறியின் அடிப்படையில் கொடுக்கப்படவில்லை, இளைஞர்களின் சீற்றத்திற்கு அஞ்சியே அது கொடுக்கப்பட வேண்டியிருந்தது.

இன்றோ, பாஜக அதே நபருக்கு நாடாளுமன்றத்தில் மாலை அணிவிக்கிறது. இது எந்த மரியாதையும் அல்ல, இது லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் அழிக்கப்பட்டதைக் கொண்டாடும் ஒரு நிகழ்வு. நாட்டிலுள்ள ஒவ்வொரு மாணவரும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளப்படுவார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.