தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு, செப்டம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரூ. 75 மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் ஒரு படம் பார்க்க வேண்டும் என்றாலே குறைந்தது 1,000 ரூபாய் செலவாகிறது. இதனால், திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது என்பது தற்போது மிகவும் யோசனைக்குரியதாக மாறிவிட்டது. சமீபத்தில் தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று வருவது மிகவும் குறைந்துவிட்டதற்கு ஒரு காரணமாக டிக்கெட் விலையும் கூறப்பட்டது. இதனால், ஓடிடியிலேயே படம் பார்க்க பெரும்பாலானோர் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 16ஆம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தியேட்டர்களின் டிக்கெட் கட்டணத்தை குறைக்க திரையரங்கங்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு, செப்டம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரூ. 75 மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த நாளில் நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ்களின் சுமார் 4,000 ஸ்க்ரீன்களுக்கு டிக்கெட் கட்டணமாக 75 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படவுள்ளது. PVR, INOX, Cinepolis உள்ளிட்ட பல்வேறு திரையரங்கு நிறுவனங்கள் இந்த முன்னெடுப்பில் பங்கேற்கின்றன என இந்திய மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-ம.பவித்ரா








