சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் இரிடியம் விற்பனை செய்ய முயன்ற 3 பேரை ஊமச்சிகுளம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சதுரங்க வேட்டை திரைப்படத்தில், போலியாக ஏமாற்றி விற்பனை செய்வதுபோல பல காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் அதேபோல, கொடைக்கானலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த பிரபு கொடைக்கானலில் பிரபலமான தனியார் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். பிரபுவை தொடர்புகொணட, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமாயன், மணிகண்டன் மற்றும் ஜெயராஜ் தங்களிடம் அரியவகை இரிடியம் இருப்பதாக கூறி 5,00,000 ரூபாய்-க்கு விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘நளினி விடுதலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு’
இவர்களின் அணுகுமுறையில், சந்தேகப்பட்ட பிரபு ஊமச்சிகுளம் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பிரபு கொடுத்த புகாரைத் தொடர்ந்து மறைந்திருந்த தனிப்படை போலீசார், ஐயர் பங்களா பகுதியில் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இரிடியம் இருப்பதாக கூறி நூதன முறையில் பலரிடம் இவர்கள் மோசடி செய்து வந்தது. அதனைத் தொடர்ந்து 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








