முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்றை விட கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், நேற்றைய பாதிப்பை விட இன்று அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 263 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இதுவரை 3,31,39,981 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 338 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,41,749 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 40,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு 3,93,614 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 71,65,97,428 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 86,51,701 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நேற்று காலை வரை 31,222 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்றைய பாதிப்பு 43, 263 ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசி கொள்முதலுக்கு மறு டெண்டர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Halley karthi

நீலகிரி கனமழை: பாண்டியர் புன்னம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Gayathri Venkatesan

”தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது”- கனிமொழி!

Jayapriya