தமிழகம் செய்திகள்

உப்புமாவில் விஷம் வைத்து குழந்தையை கொன்ற தாய்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சேமியா உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து ஒன்றரை வயது குழந்தையை கொலைசெய்து விட்டு நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார். 

கன்னியாகுமரி மாவட்டம் குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும் மூன்றரை வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தையும் ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர் .இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண் எலிக்காக வைத்த மருந்தை சாப்பிட்டு மயக்கமடைந்து விட்டதாக கார்த்திகா தனது கணவர் ஜெகதீஷ்க்கு தகவலளித்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் மயக்கமடைந்த நிலையில் இருந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் ஏற்கெனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் குழந்தை சரணின் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்கு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஷப்பொடியை குழந்தையே சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவுமில்லை எனவும் குழந்தையின் உயிரிழப்பு சந்தேகமளிப்பதாகவும் கூறி தாய் தந்தையை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது கார்த்திகாவிற்கு பலருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர் மாரயபுரம் பகுதியை சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில் என்பவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கார்திகாவிற்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரியாமல் பழகியதாகவும் அந்த தகவலை தெரிந்ததும் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கார்த்திகாவிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், சுனில் மீது கொண்ட காதலால் குழந்தையை கொன்றால் சுனில் தன்னிடம் தொடர்ந்து பேசுவார் என கருதி குழந்தையை கொலை செய்ய முடிவெடுத்தாக கூறியுள்ளார்.

இதற்காக கடந்த 2 நாட்களாக கணவனிடம் வீட்டில் எலி தொல்லை இருப்பதாக கூறி எலிமருந்து தூவி வந்ததாகவும் தெரிவித்த அவர், சம்பவத்தன்று குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சேமியா உப்புமாவில் விஷ மருந்து கலந்து கொடுத்தாகவும் இதில் மூத்த குழந்தை குறைவாக சாப்பிட்டதால் அந்த குழந்தை பிழைத்து கொண்டதாகவும், இளைய மகன் வீட்டிலேயே உயிரிழந்து விட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் பதிவு செய்து கொண்ட போலீசார் சஞ்சனா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement:
SHARE

Related posts

நீட் தொடர்பாக தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும்: உதயநிதி நம்பிக்கை

Gayathri Venkatesan

மனித மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங்: குரங்கிடம் வெற்றிகரமாக சோதனை!

எல்.ரேணுகாதேவி

பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சி 

Ezhilarasan