மாமியாரை மதுபாட்டிலால் குத்திய மருமகன்!

சென்னை, காசிமேடு அருகே மாமியாரை மது பாட்டிலால் குத்திய மருமகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, காசிமேடு திருவள்ளூர் நகர் பகுதியில் மதன்குமார் என்ற மதன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மதனுக்கும்…

சென்னை, காசிமேடு அருகே மாமியாரை மது பாட்டிலால் குத்திய மருமகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, காசிமேடு திருவள்ளூர் நகர் பகுதியில் மதன்குமார் என்ற மதன்
என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மதனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மதன்குமார் நேற்று மாலை தன் மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தன் மனைவியை அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனை தட்டிக் கேட்பதற்காக வந்த அவருடைய மாமியாரை அருகில் இருந்த மது பாட்டிலால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த பரிமளாவை (38) அருகிலிருந்தவர்கள் உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து, காசிமேடு N2 காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மதன்குமார் மீது காசிமேடு, ராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில்
வழக்கு நிலுவையில் உள்ளதும், மதன்குமார் ஏற்கனவே காசிமேடு காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், மதன்குமார் தானாகவே முன்வந்து காசிமேடு காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளார். நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் மதன் குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.