உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தி மொராக்கோ முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று முன்னேறியது.
கத்தாரில் 22வது உலக கோப்பை கால்பந்து தொடரின் 3-வது காலிறுதி சுற்றில் மொராக்கோ – போர்ச்சுக்கல் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் தங்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொராக்கோ ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
இதனால் 1-0 என முதல் பாதியில் மொராக்கோ முன்னிலை வகித்தது. பின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இதன் மூகம் ஆட்ட இறுதியில், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தியதோடு முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்று முன்னேறியது.
இந்த போட்டியில் தோல்வியடைந்த நிலையில் போர்ச்சுக்கல் அணி வீரர்கள் கண்ணீருடன் வெளியேறியது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக ரொனால்டோவுக்கு 37 வயதாகிவிட்ட நிலையில், இதுவே அவரது கடைசி போட்டி.
இதனால் போர்ச்சுகல் வெற்றிபெறவேண்டும் என்பதை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ரொனால்டோவின் கனவு தகர்ந்ததாக பார்க்கப்பட்டது அவரோடு சேர்த்து அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் மைதானத்திலேயே ரொனால்டோ அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.