ஜிம்பாப்வே ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 44ஆக அதிகரிப்பு!

கரிபா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் சென்று பயணிகள் படகு ஒன்று சென்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த மீட்பு படையினர் 77 பேரை மேடு மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த முகமை கூறியது.

இதனிடையே படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 27 பேர் மாயமாகி இருந்தனர். இதனை அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. இதனிடையே 90 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய அப்படகில், பயணச்சீட்டு விற்பனையின் அடிப்படையில் 114 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் படகில் இருந்ததாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக ஜிம்பாப்வே காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கரிபா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் நகாவா, இந்தப் படகு விபத்தை தேசிய பேரிடர் என அறிவித்துள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.