பாகிஸ்தானில் இருந்து 900-க்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் தாயகம் திரும்பினர்!

பாகிஸ்தானில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆப்கான் அகதிகள் கடந்த இரண்டு நாட்களில் தங்கள் நாட்டிற்கு திரும்பியதாக ஆப்கானிஸ்தான் அகதிகள் மற்றும் மறுகுடியுரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து கடந்த இரண்டு நாட்களில்…

பாகிஸ்தானில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆப்கான் அகதிகள் கடந்த இரண்டு நாட்களில் தங்கள் நாட்டிற்கு திரும்பியதாக ஆப்கானிஸ்தான் அகதிகள் மற்றும் மறுகுடியுரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் 900-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள் தங்கள் தாயகமான ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளதாக அந்நாட்டின் அகதிகள் மற்றும் மறுகுடியுரிமை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டு மார்ச் 21, 2023 முதல் இந்தாண்டு மார்ச் 19 வரை 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆப்கான் அகதிகள் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து திரும்பியதாக தெரிவித்துள்ளனர். மீண்டும் தாயகம் திரும்பியவர்களுக்கு தற்காலிக தங்குமிடம், தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தோர்ஹாம் மற்றும் ஸ்பின் போல்டாக் எல்லை பகுதிகள் வழியாக அவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மேலும் வெளிநாடுகளில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகள் தாயகம் திரும்பவும், போரினால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டை மீண்டும் கட்டமைக்க பங்களிக்க வேண்டும் எனவும் ஆப்கான் வலியுறுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.