முக்கியச் செய்திகள்இந்தியா

“All eyes on Rafah” -வை தொடர்ந்து சமூக வலைதல பக்கங்களில் வைரல் ஆகும் “But no eyes on Manipur”!

“All eyes on Rafah” -வை தொடர்ந்து “But no eyes on Manipur” என்கிற வாசகம் சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது.

நீங்கள் தீவிர சமூக ஊடகப் பயனராக இருந்தால், காசாவில் உள்ள ரஃபா மற்றும் காங்கோவில் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் அட்டூழியங்களுக்கு எதிராக மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் “ஆல் ஐஸ் ஆன்” என்ற பதிவை நீங்கள் பார்த்திருக்கலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த போக்குக்கு மத்தியில், “But no eyes on Manipur”, என்ற வாசகமும் ஆன்லைனில் அதிகமாக பகிரப்படுகிறது. வெளிநாட்டில் நடக்கும் வன்முறைகளைப் பற்றி மக்கள் அதிகம் பேசும்போது, ​​​​வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரைப் பொறுத்தவரை அவர்கள் அவ்வாறு செய்வதில்லை என்று இந்த சொற்றொடர் அறிவுறுத்துகிறது.

சில நாட்களுக்கு முன்பு ரஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் போது 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். இந்த நிகழ்வை மையப்படுத்தி  “All eyes on Rafah” என்கிற வாசகத்தை பயன்படுத்தி கருத்து பகிரப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, காங்கோ மீதான தாக்குதலை கண்டிக்கும் விதமாக “All eyes on Congo” என்றும் பலர் பதிவிட தொடங்கினர்.

இந்நிலையில், மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தே சமூகத்தினரிடையே வன்முறை வெடித்து ஒரு வருடத்தை நெருங்கிவிட்டது. இனக்கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலால் 50,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பல மெய்டே-குகி தம்பதிகளும் பிரிந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆனால் இந்த மணிப்பூர் விவகாரம் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை என்று அறிவுறுத்தும் வகையில் தற்போது “But no eyes on Manipur” என்கிற வாசகம் சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

போலி தடுப்பூசிகள் போடுவதை தடுக்க நிபுணர் குழு அமைப்பு

Gayathri Venkatesan

பாலியல் சீண்டல்; 4 பிரிவுகளின் கீழ் பேராசிரியர் கைது

Halley Karthik

டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மெட்ரோ ரயில் சேவைக்கும் தடை!

Halley Karthik

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading