‘ரகு தாத்தா’ திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அறிவிப்பு!

கீர்த்தி சுரேஷ் நடிக்கும்  ‘ரகு தாத்தா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து…

கீர்த்தி சுரேஷ் நடிக்கும்  ‘ரகு தாத்தா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் சிறப்பான விமரிசனங்களைப் பெற்றது.

இதையடுத்து, ‘ரகு தாத்தா’ திரைப்படத்தில்  நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மையான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். ‘ஃபேமிலி மேன்’ எனும் விருது பெற்ற எழுத்தாளர் சுமன் குமார் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் எம். எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர். இந்தப் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : 2024 மக்களவைத் தேர்தல் : ரூ.8,889 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்! – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்!

இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகிய பல விதமான விமர்சனங்களை பெற்றது. இந்தி மொழி திணிப்புக்கு எதிரான காட்சிகள் இந்த திரைப்படத்தின் டீசர் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, டீசரில் இடம்பெற்றிருந்த “இந்தி தெரியாது போயா” போன்ற வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், தற்போது இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.