நீட் பாதிப்பு குறித்து 50,000க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்துள்ளதாக தகவல்!

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் 50000க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு…

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் 50000க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது. அந்தக் குழு மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் நீட் தேர்வு குறித்து கருத்துக்களை neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க கோரிக்கை வைத்தது.

மேலும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய இன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும், 50,000-க்கும் மேற்பட்டோர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். பொதுமக்களின் கருத்துக்களளை ஆய்வு செய்து, வரும் 28ம் தேதி ஏ.கே.ராஜன் குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.