முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் குறித்து பொதுமக்கள் கருத்துகளை அனுப்பலாம்: ஏ.கே.ராஜன் குழு

நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பலாம் என ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த குழு ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என நாளிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் “தமிழ்நாடு அரசு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. இந்த குழு நீட் தேர்வு முறையால் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என ஆராய உள்ளனர்.

இதற்காக பொதுமக்கள் கருத்துகளை அறிய விரும்புகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து பொதுமக்கள் வரும் 23-ம் தேதிக்குள் சென்னையில் மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு அஞ்சல் வழியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்க விரும்புவர்கள் (neet-impact-2021@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ கருத்துக்களை அனுப்பி வைக்கலாம். பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை ஐந்து பக்கங்களுக்குள் அனுப்பவேண்டும்” என ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தூத்துக்குடி எட்டயபுரத்தில் அலங்கார ஊர்தி ஊர்வலம்.

Halley Karthik

இந்தியும் ஜொமேட்டோவும்..

G SaravanaKumar

புரபஷனல் கூரியர் வரி ஏய்ப்பு புகார்; இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு

G SaravanaKumar