முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இந்தியாவில் இரண்டாவது முறை தோன்றிய உலோகத்தூண்!

மர்மமான முறையில் தோன்றி மறையும் உலோகத்தூண் மும்பையில் உள்ள ஜோகர்ஸ் பூங்காவில் தோன்றியது சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மகராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள ஜோகர்ஸ் பூங்காவில் மர்மமான முறையில் தோன்றி மறையும் Monolith எனக் கூறுப்படும் உலோகத்தூண் ஒன்று நேற்று கண்டறியப்பட்டது.

இந்தியாவில் இரண்டாவது முறை தோன்றிய இந்த உலோகத்தூண், அங்கு பூங்காவிற்கு வந்திருந்த பொதுமக்களின் கவனத்தை பெற்றது. ஏழு அடி உயரம் கொண்ட முப்பட்டைக் கண்ணாடி வடிவில் இருந்த அந்த உலோகத்தூணின் புகைப்படத்தை மாநகராட்சி ஊழியர் ஒருவர், தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்தியாவில் முதல்முறையாக கடந்த டிசம்பர் மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இதேபோன்று உலோகத்தூண் ஒன்று தோன்றியது. மேலும் உலகளவில், இதுவரை அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளில் உலோகத்தூண் தோன்றி மறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணத்துக்கான அரசாணை வெளியீடு

Karthick

ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

Ezhilarasan

பள்ளிகளில் ஆய்வுச் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்!