அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் தொடங்கக்கூடிய நிலையில், அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.







