பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தீவிர அரசியலில் செயல்பட்டு வருகிறார்.
மேலும் தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் திரு. வி. க நகர் தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார்.
இந்த சூழலில் இயக்குநர் பா. ரஞ்சித், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு தனது ஆதரவைத் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை
பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்.கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க
தமிழ் மாநில பகுஜன்… pic.twitter.com/ODVapLqp1B— pa.ranjith (@beemji) March 29, 2026
ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதையும், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு இயக்குநர் மோகன். ஜி ஆதரவு கொடுத்திருப்பதையும் சுட்டி காட்டி பலரும் பா. ரஞ்சித்தை இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.
இது தொடர்பான விமர்சங்கள் குறித்து இயக்குநர் மோகன். ஜி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ”காலம் காலமா நீங்க கட்டமைத்த பிம்பம் அது.. நாங்க ரெண்டு பேரும் என்ன பரம்பரை எதிரியா.. சிந்தனை ஒரே இடத்தில் சேரும் போது, இருவரும் ஒருவரை ஆதரிப்பது என்ன தப்பு.. அந்த அம்மையார் வெல்லட்டும் 👍👍👍.. உங்களை வெல்வதே எங்கள் நோக்கம்.. கதறு கதறு..” என்று தெரிவித்துள்ளார்.
காலம் காலமா நீங்க கட்டமைத்த பிம்பம் அது.. நாங்க ரெண்டு பேரும் என்ன பரம்பரை எதிரியா.. சிந்தனை ஒரே இடத்தில் சேரும் போது, இருவரும் ஒருவரை ஆதரிப்பது என்ன தப்பு.. அந்த அம்மையார் வெல்லட்டும் 👍👍👍.. உங்களை வெல்வதே எங்கள் நோக்கம்.. கதறு கதறு.. https://t.co/ggI1eo7gjR
— Mohan G Kshatriyan (@mohandreamer) March 30, 2026







