சுட்டெரிக்கும் வெயில்: கரூரில் தர்பூசணி விற்பனை அமோகம்

கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட தாகம் தீர்க்கும் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு பருவ மழை போதிய அளவில் பெய்யாததால் கோடைக் காலம் தொடங்கும் முன்பே வெயிலின்…

கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட தாகம் தீர்க்கும் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்தாண்டு பருவ மழை போதிய அளவில் பெய்யாததால் கோடைக் காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மார்ச் இறுதியில் தொடங்கி
மே, ஜுன் வரை நீடிக்கும். மே மாதத்தில் கத்தரி வெயிலின் காரணமாக வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்தாண்டு தற்போதே கத்தரி வெயிலை போன்று
வெயில் அதிகமாக வாட்டுகிறது.

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வதற்காக குளிர்பானங்களை காட்டிலும் மக்கள் இளநீர், பதநீர் மற்றும் தர்பூசணி பழங்களையே அதிகம் விரும்புகின்றனர்.

கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு ஜூஸ், தர்பூசணி பழம், வெள்ளரிக்காய் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இது குறித்து தர்பூசணி வியாபாரிகள் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக தர்பூசணி விற்பனை செய்து
வருகிறோம்.

ஆனால் இந்தாண்டு தான் சீசன் முன்னதாகவே தொடங்கியுள்ளது. தற்போது கரூருக்கு சேலம், தருமபுரி மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் கொண்டு வரப்படுகிறது. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தால் பழ விற்பனை இன்னும் அதிகரிக்கும். மேலும் ஆந்திராவில் இருந்து தர்பூசணி பழங்கள் தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டால் தற்போது 30க்கு விற்கப்படும் ஒரு கிலோ தர்பூசணி 20 ரூபாய்க்கு குறைய வாய்ப்புள்ளது என கூறினர்.
—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.