முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் குரங்குபெடல் திரைப்படம்

சர்வதேச திரைப்பட விழாவான இந்தியன் பனோரமாவில்  திரையிட குரங்குபெடல் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் குரங்குபெடல் திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இது குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான மாண்டேஜ் பிக்சர்ஸ் மற்றும் எஸ்.ஆர்.ஜெ. புரடெக்சன்ஸ் சார்பில் நன்றி தெறிவித்து மடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில், எங்களது இரண்டாவது திரைப்படமான குரங்கு பெடல் திரைப்படம் இந்த ஆண்டு கோவாவில் நடக்கவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமாவினால் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, திரையிடப்பட இருக்கிறது. எனவே இதனை  அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்துள்ளனர். மேலும்
மதுபான கடை, வட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

மாண்டேஜ் பிக்சர்ஸ் சவிதா சண்முகம் ,சுமீ பாஸ்கரன், இணைத்தயாரிப்பு எஸ் ஆர் ஜெ புரடக்சன்ஸ் சஞ்சய் ஜெயக்குமார் மற்றும் கத கேளு எண்டர்டெயினர்ஸ் உடன் இனைந்து தயாரித்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படம் ராசி அழகப்பனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிரபாகர் சண்முகம் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

1980களின் கோடை காலத்தில் சேலம் (தற்போது நாமக்கல் மாவட்டம்) மற்றும் ஈரோடு மாவட்டங்களின் காவேரிக்கரையோர பகுதிகளை களமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான இதில் குழந்ந்தைகளுடன் திரு.காளி வெங்கட் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். உயிரோட்டமான பாடல்கள் மற்றும் சிறப்பான பிண்ணனி இசையின் மூலம் மக்களை கவர்ந்த ஜிப்ரான் வைபோதா இசை அமைத்திருக்கிறார். ஜிப்ரானின் பிண்ணனி இசை, மற்றும் பாடல்கள் இப்படத்திற்கு முதுகெலும்பாக அமைந்திருக்கிறது.

காலா, பரியேறும் பெருமாள், சர்ப்பாட்டா பரம்பரை, குதிரை வால், ஜல்சா (ஹிந்தி) திரைப்படங்களுக்கு ஒலிக்கலவை செய்த அந்தொனி பி ஜெ ரூபனின் ஒலிக்கலவை இத்திரைப்படத்தை உலகத்தரத்துக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. தீரன் அதிகாரம் ஒன்று, டெடி, க/பெ ரணசிங்கம், வட்டம் திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சிவா நந்தீஸ்வரனின் மிக நேர்த்தியான படத்தொகுப்பு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. சுமீ பாஸ்கரன் தனது சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் இயக்குனரின் கற்பனையை அப்படியே திரையில் காட்சி படுத்தியிருக்கிறார். இயக்குனர் பிரம்மா, என்.டி. ராஜ்குமார் ஆகியோர் பாடல்கள் எழுதி இருக்கிறார்கள்.

வெந்து தணிந்தது காடு, ஜெய் பீம், காத்துவாக்குல ரெண்டு காதல், சாணிக்காயிதம், சூப்பர் டீலக்ஸ் படங்களுக்கு வண்ணக்கலவை செய்த பாலாஜி கோபால் இத்திரைப்படத்துக்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார். 1980களின் கோடைகாலத்தில் கத்தேரி என்கிற கிராமத்தில் சைக்கிள் ஓட்டத்தெரியாத ஒரு தகப்பனுக்கும், சைக்கிள் ஓட்டிப்பழகுவதில் ஆர்வமாக இருக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான கதையை இத்திரைப்படம் விவரிக்கிறது.

 

– பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹிஜாப் சர்ச்சை: ’கண்டிப்பாக சீருடை முறையைப் பின்பற்ற வேண்டும்’ – பாஜக எம்.பி

G SaravanaKumar

இந்தியாவில் 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

EZHILARASAN D

“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா” – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

Saravana