வாரிசு அரசியல் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!

வாரிசு அரசியல் குறித்த பிரதமர் மோடியின் பேச்சை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  சேலத்தில் பாஜகவின் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,…

வாரிசு அரசியல் குறித்த பிரதமர் மோடியின் பேச்சை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

சேலத்தில் பாஜகவின் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜகவின் கூட்டணி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி திமுகவை அதிகம் விமர்சித்து பேசியிருந்தார். அப்போது பேசிய அவர், திமுகவும், காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். வாரிசு அரசியல், ஊழல் உள்ளிட்ட தேச விரோத செயல்கள் இரு கட்சிகளிலும் நிறைந்துள்ளன எனப் பேசினார்.

இந்நிலையில் மோடியின் இந்த விமர்சனத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

மூப்பனார் மகன் வாசன், ராமதாஸ் மகன் அன்புமணி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், குமரி அனந்தன் மகள் தமிழிசை ஆகியோரை மேடையில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று பிரதமர் மோடி பேசுவது அவரின் அதீத நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.