இஸ்ரேலை ஆதரித்ததற்காக இந்திய மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்!

இந்தியாவுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் இஸ்ரேலை ஆதரிப்பதாக அறிவித்துள்ள மோடி 140 கோடி இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என  தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.  மனிதநேய மக்கள் கட்சி…

இந்தியாவுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் இஸ்ரேலை ஆதரிப்பதாக அறிவித்துள்ள மோடி 140 கோடி இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என  தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

மனிதநேய மக்கள் கட்சி சமூக இயக்கங்கள் சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யாகூப் தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்றது.

இந்த  ஆர்ப்பாட்டத்தில்  சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

பாலஸ்தீன் நாட்டை அழித்து விட்டு தன் வசப்படுத்த துடிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது தவறானது.  அதற்காக 140 கோடி இந்திய மக்களிடம் பகிரங்கமாக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.