முக்கியச் செய்திகள் மழை

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசனதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில இடங்களில் லேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே, 15-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘தென்மேற்கு பருவமழை 15ம் தேதி தொடங்க வாய்ப்பு!’

அசானி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க இருப்பதால், அதன் தாக்கத்தின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்பத்தூர், மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சில மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

மகாராஷ்டிரா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு

Gayathri Venkatesan

தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை திமுக அரசு ஆதரிக்காது: கனிமொழி

Arivazhagan CM

கோகோ கோலா நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்க்!

எல்.ரேணுகாதேவி