முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும்; தமிழ்நாடு அரசு

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத்திட்டத்தின் மூலம் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மக்களின் குறைகளைக் கேட்டுத் தீர்வு காணும் பொருட்டு மே-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 14.05.2022 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகளும் அதில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு’

நியாய விலைக் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ளக் குடும்ப அட்டைதாரர்கள் இந்தச் சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

”புதிய வகையான கொரோனா தொற்றை கண்டு பயப்பட வேண்டாம்”- செல்லூர் ராஜூ!

Jayapriya

‘Covishield’ கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பம்!

Arun

காவல்துறை அதிகாரியாக உதயநிதி; நெஞ்சுக்கு நீதி படத்தின் ஸ்டில்ஸ்

Arivazhagan CM