புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்தது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் இருதினங்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தார்.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 3 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் ஈரப்பதமான காற்று வீசி வந்தநிலையில் மதியம் 1 மணிமுதல் லேசான மழை பெய்து வருகிறது.
- பரசுராம், மாணவ ஊடகவியலாளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







