விவேகானந்தர், பாரதியார், திருவள்ளுவர், ரவீந்திரநாத் தாகூர் போல மோடியின் கருத்துகள் வரும் காலத்திலும் நிலைத்திருக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் 45-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் உரைகள் அடங்கிய தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது. அதில், அண்ணாமலை புத்தகத்தை வெளியிட சென்னையின் முன்னாள் மேயரும், அதிமுகவை சேர்ந்தவருமான சைதை துரைசாமி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடி இரு நாட்டு தலைவர்களிடமும் பேசி உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்டு வருவதாக கூறினார்.
அண்மைச் செய்தி: உக்ரைனிலிருந்து இந்தியர்கள் மீட்கும் பணி – திய அரசை பாராட்டிய உச்சநீதிமன்றம்.
இந்த நேரத்தில் உக்ரைனுக்கு தமிழக அரசு குழு அனுப்பி உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மாநிலத்தின் பணி இதுவல்ல என்றும் குறிப்பிட்டார். முழுக்க, முழுக்க அரசியல் ஆதாயத்துக்காகவே திமுக இதில் ஈடுபகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். திமுக கூட்டணி ஒரு முரண்பாடான கூட்டணி என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







