மோக்கா புயல் எதிரொலியாக 2-வது நாளாக உள்வாங்கிய கடல்!

வேதாரண்யத்தில் மோக்கா புயல் எதிரொலியாக இரண்டாவது நாளாக கடல் நீர் உள்வாங்கிய நிலையில் 6வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட…

வேதாரண்யத்தில் மோக்கா புயல் எதிரொலியாக இரண்டாவது நாளாக கடல் நீர் உள்வாங்கிய நிலையில் 6வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள மோக்கா புயல் காரணமாக கடலில் பலத்த காற்ற வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று 6 வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வேதாரண்யம் கடற்கரையில் இன்று 2வது நாளாக கடல் நீர் சுமார் 500 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. இதனால் கடலில் உள்ள சேர் வெளியே தெரிகிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை மீனவர்கள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள்வீடுகளிலே முடங்கிப் போய் உள்ளதால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

—-ரெ.வீரம்மாதேவி                                                                                                                 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.