கரூர் தென்னிலை பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், ஆண்டிசெட்டிபாளையம் முதல் கூனம்பட்டி, கரைத்தோட்டம் வரையிலான பகுதியில் 110 KV உயர் மின் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதி விவசாயிகள் இந்த திட்டத்தை கைவிட கோரி எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து, அப்பகுதி விவசாயிகளை காவல் துறையினர் கொண்டு மிரட்டி, அச்சுறுத்தி விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைத்து வருகின்றனர். இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி ராஜா.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ராஜா, மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட சுமார் 10
பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
—-ம. ஶ்ரீ மரகதம்







