முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆதரவற்ற சடலத்தை அடக்கம் செய்த மநீம வேட்பாளர்!

காரைக்குடி தொகுதி மநீம வேட்பாளர் இராசகுமார், பரப்புரையை பாதியில் நிறுத்திவிட்டு, ஆதரவற்ற சடலத்தை மீட்டு, இடுகாட்டில் இறுதி சடங்குகளை செய்து, நல்லடக்கம் செய்துள்ளார்.

காரைக்குடி தொகுதியில் மநீம சார்பில் இராசகுமார் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் தமிழக மக்கள் மன்றம் என்ற அமைப்பை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் பல்வேறு சமூக சேவைகள் செய்து வந்ததோடு மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற நிலையில் இறந்தவர்களின் உடல்களை தமது அமைப்பினருடன் சேர்ந்து நல்லடக்கம் செய்து வந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தற்போது, தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது இராசகுமாருக்கு காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதனையடுத்து, பரப்புரையை நிறுத்திவிட்டு தனது தொண்டர்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து இடுகாட்டில் நல்லடக்கம் செய்தார். இவரின் மனிதநேயத்தை கண்டு பலரும் பாராட்டினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவியா? அண்ணாமலை பதில்

EZHILARASAN D

அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு

G SaravanaKumar