“தமிழகத்தில் காலூன்ற பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது” – மு.க.ஸ்டாலின்

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே, புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட…

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே, புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தலின்போது மட்டுமே மக்களை தேடிவருபவன் நான் இல்லை என்றும் எப்போதும் மக்களுக்கு துணையிருப்பவன் என்றும் கூறினார். தமிழகத்தில் காலூன்ற பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது என்றும் கூறிய மு.க.ஸ்டாலின், என்னதான் செய்தாலும், சட்டமன்ற தேர்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்றார்.

முன்னதாக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்றையாவது அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதா? என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார். தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளைக்கூட அதிமுக அரசு தீர்க்கவில்லை என குற்றம் சாட்டிய ஸ்டாலின், திமுக ஆட்சி அமைத்தால் முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும் என உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.