இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள இன்று திருவாரூர் செல்கிறார். இன்று மதியம் தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள இன்று திருவாரூர் செல்கிறார்.

இன்று மதியம் தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் பயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவுள்ளார்.

பிறகு, அதே பகுதியில் நடைபெற்றுவரும் கருணாநிதி அருங்காட்சியகக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். இதனையடு்தது நாளை காலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனி மருத்துவப் பிரிவு வளாகத்தை திறந்துவைக்கிறார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.