முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுமிக்காக காரை நிறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி சிறுமி ஒருவர் அளித்த புத்தகத்தை பெற்றுக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்திற்கு மரியாதை செலுத்த சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க வழி நெடுகிலும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அந்த வரிசையில் சிறுமி ஒருவரும் முதலமைச்சரைப் பார்த்து பரிசளிப்பதற்காக புத்தகம் ஒன்றுடன் காத்திருந்தார்.

இதையடுத்து சிறுமியைக் கண்ட முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தி சிறுமியிடம் புத்தகத்தை பெற்றுக்கொண்டார். தன்னிடம் இருந்த புத்தகப் பரிசை முதலமைச்சர் பெற்றுக்கொண்டதால் சிறுமி மகிழ்ச்சியடைந்தார்.

Advertisement:

Related posts

மனிதனைத் தாக்கும் கருப்புப் பூஞ்சை!

பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு

Niruban Chakkaaravarthi

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது!

Jeba Arul Robinson