முக்கியச் செய்திகள் தமிழகம்

மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

மருத்துவர்களிடமும், பெற்றோர்களிடமும் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என்ற கருத்துக்களே அதிகம் வருவதாக தெரிவித்த அவர், சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் முடிவுகளின் படியே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை இருக்கும் என்று கூறினார்.

கொரோனா தொற்றின் மூன்றாம் கட்ட அலை குறித்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா அதிகரிக்கும் சூழலில் பெரிய பேரணிகள் நடத்த வேண்டுமா? ராகுல் காந்தி

Halley karthi

இந்தியில் சிபிஐ அதிகாரியாக நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!

Gayathri Venkatesan

இந்தியாவில் தங்கத்தின் தேவை 19% அதிகரிப்பு

Gayathri Venkatesan